by admin on | 2025-01-25 09:22 PM
*ஊட்டியில் "நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்ட உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்ட தலைமை செய்தி அனைத்து பத்திரிகையாளர் சங்கம்" ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
ஊட்டியில் கடந்த 18ம் தேதி "நமது எம் ஜி ஆர்" பத்திரிகைச் செய்தியாளர் திரு. செந்தில்குமார் ஊட்டியில் பார்க்கிங் பகுதியில் கட்டண கொள்ளை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதற்காக, அந்த பார்க்கிங் ஒப்பந்ததாரர் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய நெஞ்சு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
செந்தியாளர் செந்தில் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் "தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், செய்தியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போடப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான மனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் A. பாஷா, த
சண்முகம், த
AVM . சரவணன் மற்றும் சகாயராஜா, ஜெரால்டு, மகேந்திரன், ஜாம்பவான் ஜெரால்டு, லாரன்ஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் அனைத்து நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் என
100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !