by satheesh on | 2026-10-19 09:24 PM
கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் போதைப்பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நாட்டாம்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவல்துறையினர் இன்று (19.10.2026) நடத்திய சோதனையில், MDMA 0.08 கிராம், 8 LSD ஸ்டாம்புகள் மற்றும் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, விடுதியில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (22) மற்றும் சுற்றுலாப் பயணியான டேனியல் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொடைக்கானலில் போதைப்பொருட்கள் பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பாக இதுவரை 7 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!