by admin on | 2026-10-18 07:41 PM
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
அக்டோபர் 20-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 20, 2026 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்வழிப் பாதைகளில் திடீரென நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
⚠️ பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கைகள்:
? ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள், அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளுக்குச் செல்வதையும், நீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
? நீர்வழிப் பாதைகளைக் கடக்க முயற்சிக்கக் கூடாது.
? இடி, மின்னல் ஏற்படும்போது திறந்தவெளிகள், வயல்வெளிகள், நீர்நிலைகளின் கரைகள் மற்றும் தனித்து நிற்கும் உயரமான மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
? இடி, மின்னலின்போது பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும். மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்சாதனங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
? தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைநீர் தேங்கிய சாலைகள் மற்றும் தரைப்பாலங்களைக் கடக்கக் கூடாது.
? வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
? பெற்றோர்கள் குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்.
? மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவுறுத்தல்:
மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பேரிடர் காலங்களில் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
? அவசர உதவி எண்: 1077
அவசரகாலச் சூழ்நிலைகள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக திருநெல்வேலி மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட மக்களே, எச்சரிக்கையுடன் இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்!
— மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மாவட்டம்.
தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!