by Vignesh Perumal on | 2026-05-14 12:41 PM
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகமான 'எம்.ஜி.ஆர் மாளிகை'யில் இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி. சண்முகம் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடு.
கட்சி ரீதியான முடிவுகளை எடுப்பதில் இருவருக்கும் இடையே நிலவும் முரண்பாடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஓ. பன்னீர்செல்வம் பிரிந்த பிறகு ஓரளவு அமைதியாக இருந்த அதிமுகவில், தற்போது மீண்டும் முக்கியத் தலைவர்களிடையே மோதல் போக்கு நிலவுவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்களும் திரள வாய்ப்புள்ளதாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக்குள் மோதல் நிலவினாலும், எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் மற்றுமொரு முக்கியப் புகாரை முன்வைக்க ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக கட்சி, "குதிரை பேரத்தில்" ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை இழுக்க தவெக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
தவெக அரசு மீது எழுந்துள்ள இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் தற்போதைய அரசியல் குழப்பங்கள் குறித்தும் அவர் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சி.வி. சண்முகம் தரப்பு மற்றும் EPS தரப்பு என இருதரப்பும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உட்கட்சி பூசல் மற்றும் தவெக மீதான EPS-ன் புகார் ஆகியவை வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!