by satheesh on | 2026-04-01 06:22 PM
PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!* நாளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் கார்டு நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் என்னென்ன? நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன.
அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது… நாளை முதல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ், நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாணப் பத்திரம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இதுவரை ஆதார் கார்டு மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்றிருந்தது. இனி புதிதாக வழங்கப்படும் பான் கார்டுகளில் உள்ள தகவல்கள், ஆதார் கார்டில் உள்ளது போலவே இருக்கும். ஏற்கெனவே, பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆதார் தகவலுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அதை சரிசெய்ய அரசாங்கம் புதிதாக விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வேறு என்னென்ன மாற்றங்கள்? ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால் மட்டும் பான் கார்டு காட்டினால் போதும். நாளை முதல், புதிதாக வாங்கும் வாகனங்களின் விலை ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டும் பான் கார்டு தேவை. அதிக மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களுக்கு பான் கார்டு அவசியம். ஆனால், டிராக்டர் வாங்கும்போது, பான் கார்டு காட்ட வேண்டும் என்பதில்லை. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்கு கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் மட்டும் பான் கார்டு தேவை. ரியல் எஸ்டேட் துறையில், ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாக பெற்றாலோ, பான் கார்டு காட்ட வேண்டும். அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு தேவை.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!