by aadhavan on | 2026-03-31 03:47 PM
மதுரை சித்திரை திருவிழா, பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன என்று எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் புகழாரம் சூட்டி பேசினார்.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் சிறார்கள் கொண்டாடும் சித்திரை திருவிழா புத்தக அறிமுக விழா மதுரையில் நடைபெற்றது. தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம் பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். ரோட்டரி உதவி ஆளுநர் நெல்லை பாலு பாராட்டுரை வழங்கினார்.
எழுத்தாளர் ஆதவன், சிறப்பு விருந்தினர் நிக்கோலஸ் பிரான்சிஸை அறிமுகம் செய்தார். பின் அவர் 'வாசிப்பும் நேசிப்பும்' என்ற தலைப்பில் பேசியதாவது;
இந்தியாவின் தொன்மையான நகரங்களில் முக்கியமானது மதுரை. கலாச்சார பெருமைகளை கொண்ட இந்த நகரை விட்டு வரலாற்றை எழுத முடியாது. மதுரைக்கு மணிமகுடமாக இருப்பது சித்திரைத் திருவிழா தான். பன்மைத்துவத்தின் அடையாளம் இந்த விழா.
பெரியோர்கள் மட்டுமின்றி சிறார்களும் சிறப்பாக கொண்டாடும் பெருமை இந்த விழாவுக்கு உண்டு. சங்க இலக்கியமான பரிபாடலிலேயே சித்திரை திருவிழா பற்றிய குறிப்புகள் உள்ளன. இதிலிருந்தே இந்த விழா எவ்வளவு தொன்மையானது என அறிய முடியும். இந்த வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக ' சிறார்கள் கொண்டாடும் சித்திரை திருவிழா' என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம்.
முழுக்க முழுக்க மாணவர்கள், பொதுமக்களின் பங்களிப்போடு அவர்களின் கதை, கட்டுரை, கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் ஓவியம் உட்பட அனைத்தும் மதுரை வாழ் மக்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையின் வரலாற்றின் முக்கியமான அடையாளமாகவும் இந்த புத்தகம் பார்க்கப்படும்". இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் சமூகப் பணியினை பாராட்டி அட்சய சேவா ரத்னா விதினை ரோட்டரி உதவி ஆளுநர் நெல்லை பாலு வழங்கினார்
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
••••••
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!