by satheesh on | 2026-03-03 07:48 AM
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பட்டயப்படிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி குழளூர் வேளாண்மை கல்வி நிறுவனம் கடந்த 2016 ஆண்டு முதல் இரண்டு வருட வேளாணி பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தில் இதுவரை சுமார் 2000-ற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பட்டயப்படிப்பு படித்து முடித்தூள்ளனர். இதில் சுமார் 300 க்கு மேற்பட்டோர் தமிழக வேளாண்மை துறையில் பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் உதவி வேளாண்மை அலுவலர்களான பணிப்புறிகின்றார்கள். இருப்பினும் இக்கல்வி நிறுவனத்தின் பட்டயப் படிப்பினைப் பற்றிய விழிப்புணர்வு திருச்சி மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை இதற்காக புதிதாக பதவியேற்றுள்ள இக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர்.மு. அசோகன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வேளாண் பட்டயப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் வேலை வாய்ப்புகள் குறித்து +2 பயிலும் மாணவர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த (24.02.2026 செவ்வாய்கிழமை) அன்று திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திரு. பழனிவேல் அவர்கார் தலைமையில் வேளாண் பட்டயப்படிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாணி கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் முனைவர்.இரா.வினோத் அவர்கள் மாணவர்களிடம் வேளாண் பட்டயப்படிப்பு முடிந்தவுடன் 21 வயதில் அரசு பணி மற்றும் தனியார் தூறையில் வேலை வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். குறிப்பாக வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர் , மத்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிலையத்தில் தொழில் நுட்ப உதியாளர் பணிகள், காபி வாரியம், தேயிலை
வாரியம், பட்டு வாரியம் மற்றும் ரப்பர் வாரியம் போன்ற வேளாண் சார்ந்த பல்வேறு பொது பணி துறைகளில் தொழில்நுட்ப உதவியாளர் பணி மற்றும் அதன் ஊதியம் பற்றி விரிவாக கூறினார்.
மேலும் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் முனைவர் ச.சிவரஞ்சனி அவர்கள் +2 முடித்தவுடன் எவ்வாறு வேளாணி பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் ,தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் எப்போது விண்ணப்பம் கொடுக்கபடும் வேளாண் பட்டயப்படிப்பு மட்டும் அல்லாமல் மற்ற வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு சோர மாணவர்கள் தாங்கனை எவ்வேறு தயார் செய்து கொள்வது போன்ற பல்வேறு விவரங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட +2 வேளாண் தொழில் கல்வி, அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முன்னதாக இந்திகழ்ச்சியின் வரவேற்பு உரையினை வேளாண் தொழில் கல்வி ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் வழங்கினார் இறுதியாக கணித பாடபிரிவு ஆசிரியை திருமதி. ஜெயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?