by Satheesh on | 2025-03-18 04:23 PM
மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முருகப்பெருமான் தெய்வானைக்கு மங்கல நாண் சூடும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
இதேசமயம் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வருதல் நிகழ்வு நடக்கிறது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பகல் 1 மணி அளவில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன்கோவில் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று (செவ்வாய் கிழமை) சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆடி வீதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி இன்று திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி, திருக்கல்யாணத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பங்கேற்பதால் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம்: அருள்மிகுசுப்ரமணியசுவாமி, திருக்கல்யாணத்தைமுன்னிட்டு, அன்னை மீனாட்சிஅருள்மிகு சொக்கநாதர்பெருமான் வெள்ளி சிம்மாசனத்தில் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
நிருபர்கள் : சதீஷ்குமார் மற்றும் மீனாட்சி சுந்தர், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!