by Muthukamatchi on | 2025-03-16 03:09 AM
அருள்மிகு ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்,இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார். இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார். வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில், ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.சுந்தர காண்டம் 2885 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. சமஸ்கிருத வார்த்தையான சுந்தர என்பதற்கு தமிழில் அழகான என்று பொருள். இராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் மகிமை மிகவும் முக்கியமானதாகும். கடலானது சம்சார சாகரத்தைக் பிரதிபலிக்கிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், பரமாத்மாவையும், பூமா தேவியின் அம்சமான சீதாபிராட்டியையும், ஜீவாத்மாவுடன் ஒப்பிட்டு கூறுகிறார். ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியை குரு அல்லது தெய்வீக ஆசிரியராக குறிப்பிடுகிறார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!