by Muthukamatchi on | 2025-03-14 06:29 AM
அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்*இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் எட்டு கைகளுடன் அருள்புரிகிறாள். மகிஷனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிஷாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள். இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பூ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது. அந்தி என்றால் இறுதி என பொருள்படும். ஆகையால் இந்த அந்தியூர் பத்ரகாளியை வணங்குவதால், எந்த பிரச்னையும் இறுதி முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள வீர காலபைரவரும் புகழ்பெற்று விளங்குவது சிறப்பாகும். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், போன்ற தொழில்கள் செய்யவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!