by admin on | 2025-03-11 04:05 PM
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சுகதேவ் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருபவர் வினோத், இவர் மற்றும் இவரின் சகோதரர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக கட்சிப் பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எட்டாவது வார்டில் சுகதேவ் விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்வினோத் வசிக்கும் வீடும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளதாக வினோத் குற்றச்சாட்டு தெரிவித்தார் மேலும்பழனிசெட்டிப்பட்டியில் உள்ள 15 வார்டுகளில் தான் வசித்து வரும் தெருவை தவிர மற்ற அனைத்து தெருவிற்கும் சிமெண்ட்சாலை வசதிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகதேவ் தெருவில் மட்டும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலை வசதிகளை மேற்கொள்ளாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அவசர தேவைக்கு கூட தெருவை கடந்து செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறினார்.மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இப்புகார் குறித்து பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியிடம் கேட்டபோது: மேலே கூறிய புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. எட்டாவது வார்டு உள்ள நான்கு தெருக்களி சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. தற்போது சுகதேவ் தெருவில் சிமெண்சாலை அமைப்பதற்காக நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. தெருவில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் ஆட்டோக்கள் கூட சென்று திரும்ப முடியவில்லை. எனவே இத்தெருவில் வசிக்கின்ற 80 வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை ஆற்றிக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, தற்பொழுது வரை 70 வீட்டின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஆட்சேபனை இல்லை என்று கூறி நிர்வாகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். அனைத்து வார்டுகளிலும் கட்சி பாகுபாடு இன்றி அரசின் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலே கூறப்பட்டுள்ள புகாரில் எவ்வித உண்மைத் தன்மைகள் இல்லை என்று கூறினார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!