by Vignesh Perumal on | 2025-06-02 12:28 PM
அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வரும் திண்டுக்கல் முத்தனம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை லீகா மூத்தீஸ்வரன், ரெட்டியார்சத்திரம் கீழ் உள்ள அங்கன்வாடி காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்த நிலையில், "மூன்றாம் பாலினத்தவர்" என்பதால் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து லீகா மூத்தீஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழக அரசு, திருநங்கைகள் மேல்நிலைப் பள்ளியில் படித்து அரசுப் பணிக்கு வரவேண்டும் என்று பல்வேறு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. ஆனால், எங்களுக்கு நடைமுறையில் முன்னுரிமை வழங்குவதில்லை. அங்கன்வாடி பணியிடத்திற்கு நான் விண்ணப்பித்திருந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். நாங்கள் கைதட்டிப் பிச்சை எடுக்காமலும், பாலியல் தொழிலுக்குச் செல்லாமலும், சுய மரியாதையுடன் வாழ விரும்புகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஏன் உதவ மறுக்கிறது?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தனது கல்வித் தகுதிக்கும், ஆசிரியர் அனுபவத்திற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும், திருநங்கைகள் சமூகத்தில் படும் சிரமங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். அரசு, திருநங்கைகளின் உரிமைகளை அங்கீகரிப்பதுடன், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், சமூகத்தில் பாகுபாடு இல்லாமல் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம், திருநங்கைகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் மற்றும் சமூகப் பாகுபாடுகள் குறித்து மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!