by admin on | 2026-06-26 12:34 PM
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 பிறந்த நாள் விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பெரியகுளம் நகர் 15வது வார்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 பிறந்த நாள் அன்று மாநிலச் செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படியும் பெரியகுளம் நகரச் செயலாளர் கில்லி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கிணங்க 15 ஆவது வார்டு செயலாளர் பாலசுப்பிரமணி இணை செயலாளர் பால்பாண்டி முன்னெடுப்பில் 300 மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்னதானம் இரு பிரிவாக பிரித்து 15வது வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சேரும்படி பிரித்துக் கொடுக்கப்பட்டது. அனைத்து தாய்மார்களும் தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நன்றியும் தெரிவித்தனர். உடன் 15வது வார்டு உறுப்பினர்கள் கபிலன், ராமர்,ராகுல், மகேந்திரன்,பார்த்தசாரதி,முகிலன் பனையடியான் சன்னாசி, மீனா, போதுதம்மாள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"