by Vignesh Perumal on | 2026-03-30 01:27 PM
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,660-லிருந்து ரூ.60 குறைந்து ரூ.13,600-ஆக உள்ளது.
தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-லிருந்து குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சில அரசியல் மாற்றங்கள் காரணமாகத் தங்கம் மீதான முதலீடு சற்று குறைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்து விலை இறக்கத்தைச் சந்தித்துள்ளது. திருமண சீசன் முடிவடையும் நிலையில் உள்ளதால், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்று சீராக உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"