by Vignesh Perumal on | 2025-05-25 09:27 PM
மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் 2002-2005 ஆம் ஆண்டுகளில் BBE (Bachelor of Business Economics) படித்த முன்னாள் மாணவ மாணவிகள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மே 25, 2025) ஒன்றுகூடி தங்கள் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டனர். மனதுக்கு இதமான இந்தச் சந்திப்பில், பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். 2001-2002 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கால ஓட்டத்தின் வீச்சை கண்முன்னே காண முடிந்தது. கல்லூரிக் காலத்தில் ஒன்றாகப் படித்த நண்பர்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, பல மாற்றங்களுடன் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அடைந்த மாற்றங்கள், அனுபவங்கள், குடும்பம், பணி என அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மதிய உணவு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, ஆடு வெட்டி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் மிகுந்த திருப்தியை அளித்தது.
இந்த இனிய சங்கமத்தை ஒருங்கிணைத்த அசோக்குமார், ஞானசேகரன், குணா, மற்றும் லாரன்ஸ் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்த இந்த நாள், அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத, இனிய நாளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!