by Satheesh on | 2025-05-20 08:06 PM
கன்னியாகுமரி : தக்கலை D S P பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 9 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரணியல் கம்மன்குடித்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கப்பன் என்பவரின் மகன் பிரதீஸ் குமார், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஜிண்டோ என்பவரின் மனைவி பர்ஹத் லைலா,நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் ஷேக் சையது அலி @ பைசல்,இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அனிஷ் @ சிட்டாவெள்ளிமலை சிவசெல்வன் என்பவரின் மகன் பிரகாஷ்ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!