by Vignesh Perumal on | 2025-05-19 06:23 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை (மே 20, 2025), தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் நாளை கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!