by Vignesh Perumal on | 2025-05-18 07:02 PM
சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தாதகாப்பட்டியைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சில பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாருடனும் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், சேலத்தில் மீண்டும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!