by Vignesh Perumal on | 2025-05-18 02:47 PM
குமரியில் புதுமனை புகுவிழாவிற்கு சென்ற ராணுவ வீரர் ஒருவர், அங்குள்ள குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இரண்டு ஆண்டுகளாக பெண்ணின் வீடியோவை பதிவு செய்து வந்த நிலையில், தற்போது விடுமுறைக்கு வந்தபோது மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் புதுமனை புகுவிழா கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ராணுவ வீரரான மதுநடராஜா என்பவர், அந்த வீட்டின் குளியலறையில் ரகசிய கேமராவை மறைத்து வைத்துள்ளார். பின்னர், அவர் மிசோரமில் பணிபுரிந்தவாறு அந்த கேமரா மூலம் பதிவான வீடியோக்களை இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்துள்ளார்.
சமீபத்தில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த மதுநடராஜா, அந்தப் பெண்ணை தான் பதிவு செய்த வீடியோக்களைக் காட்டி மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுநடராஜா குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்ததும், அதனை வைத்து மிரட்டியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் மதுநடராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!