by Vignesh Perumal on | 2025-05-17 11:15 AM
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொரிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் இன்று (17.05.2025) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.
பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். இந்த ஆண்டு போட்டியில் 650 ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றை அடக்க 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
காலை முதலே ஜல்லிக்கட்டு மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திறமையுடன் அடக்க முயற்சி செய்து வருகின்றனர். வீரர்களின் துணிச்சலையும், காளைகளின் வீரியத்தையும் காணும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். போட்டியை காண ஏராளமானோர் குவிந்திருப்பதால், அப்பகுதி திருவிழா போல் காட்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!