by Vignesh Perumal on | 2025-05-16 01:34 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
பழனி ஆயக்குடியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதியின் கட்டுமானப் பணிகள் எந்த நிலையில் உள்ளது, தரமாக நடைபெறுகிறதா என்பது குறித்து அமைச்சர் மதிவேந்தன் இன்று (16.05.2025) நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, விடுதியின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், விடுதியின் தரம் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!