by Vignesh Perumal on | 2025-05-16 12:52 PM
பொள்ளாச்சியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அவரை கண்மூடித்தனமாக தாக்கிய ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரது தந்தையின் கண்முன்னே கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது. இந்த வெறிச்செயலில் சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
படுகாயமடைந்த சிறுமி தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் அருண்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தையும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!