by Vignesh Perumal on | 2025-05-12 09:43 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று (மே 11, 2025) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் இடும்பன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், பழனிக்கு தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அருகில் இருந்த இடும்பன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் குதித்தபோது பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயத்தின் காரணமாக அவனால் வெளியே வர முடியவில்லை.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவனைத் தேடியுள்ளனர். அப்போது குளம் அருகே சிறுவனின் ஆடைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!