by satheesh on | 2026-09-28 01:55 PM
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, நூடுல்ஸ் கடையில் பழகிய காதலனுடன் இணைந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியையும், கள்ளக்காதலனையும் தென்காசி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். நூடுல்ஸ் கடைக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட கள்ளக்காதலால், கணவனை திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்த மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஷட்டர் வேலை செய்து வந்த அப்துவித் ரஹ்மத் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் கொலையாளி யார் என்பதற்கான எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்ததாகக் கருதப்படும் நேரத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு வாடகை கார் அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது. அந்த காரின் எண்ணை வைத்து விசாரித்த போது, அது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் என்பது உறுதியானது. உடனடியாக அங்கு விரைந்த தென்காசி போலீஸார், காரின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தென்காசியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் அந்த காரை வாடகைக்கு எடுத்துச் சென்றதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து மகேஷ் குமாரைத் தேடிச் சென்ற போலீஸாருக்கு, அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் அவரை வளைத்துப் பிடித்து, தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போதுதான் இந்த கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. மகேஷ் குமார் வேலை செய்யும் ஹோட்டலுக்கு, கொலை செய்யப்பட்ட அப்துவித் ரஹ்மத்தின் மனைவி கம்சா (என்ற நிஷா) அடிக்கடி நூடுல்ஸ் வாங்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவரை விடுத்து மகேஷ் குமாருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட நிஷா, அதற்கு தடையாக இருந்த தனது கணவனைத் தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.bதிட்டத்தின்படி, ஷட்டர் வேலை பார்த்து வந்த அப்துவித் ரஹ்மத்தை மகேஷ் குமார் அணுகியுள்ளார். தென்காசியில் உள்ள ஒரு தோட்டத்தில் பெரிய ஷட்டர் வேலை இருப்பதாகக் கூறி, "நீங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய ரஹ்மத்தை, தான் வாடகைக்கு எடுத்த காரில் ஏற்றிக்கொண்டு அந்தத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். தோட்டத்தின் உள்ளே சென்று ரஹ்மத்தை அளவு எடுக்கச் சொல்லிவிட்டு, அவர் கவனிக்காத நேரத்தில் பின்னால் இருந்து கிரைண்டர் கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார் மகேஷ் குமார். இதில் ரஹ்மத் சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலைக்குப் பிறகு, எதுவும் தெரியாதது போல அதே காரில் மகேஷ் குமார் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தப்பிச் சென்றுள்ளார். தற்போது மகேஷ் குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி நிஷா ஆகிய இருவரையும் இலத்தூர் போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூடுல்ஸ் கடையில் தொடங்கிய கள்ளக்காதல், கணவனின் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கணவன் கொடூர கொலை - கள்ளக்காதலனுடன் மனைவி கைது! தட்டி தூக்கிய போலீஸ் !!
தேனி - 98 கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ! தொடரும் காத்திருப்பு போராட்டம் !!
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?