| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி - 98 கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ! தொடரும் காத்திருப்பு போராட்டம் !!

by satheesh on | 2026-09-28 11:38 AM

Share:


தேனி - 98 கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ! தொடரும் காத்திருப்பு போராட்டம் !!

98 கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தொடரும் காத்திருப்பு போராட்டம் !

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலை -  கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை வன சரணாலயத்திற்குட்பட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என கூறி உச்ச நீதிமன்றம் தங்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்கிராம மக்கள் தங்களை வெளியேற்றக் கூடாது எனவும், நிறுத்தப்பட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும், தங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் எனவும், தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீரவி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில்
வருசநாடு, கோம்பை தொழு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, மூலக்கடை 
குமணந்தொழு, சிங்கராஜபுரம் தங்கம்மாள்புரம், முத்தாலம்பாறை, 
உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற் பட்ட காவலர்கள், மற்றும் அதிர டிப்படை காவல் குழுவினர் உள்ளிட்டோர்  பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் கடமலைக்குண்டு வருசநாடு சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேலப்பட்டி வழியாக தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பஸ்கள்  உள்ளிட்ட அனைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.  போராட் டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காத்திருப்பு
 போராட்டமானது வரும் 29ம் தேதி வரை நடைபெ றுகிறது. தமிழக தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வனத்துறையின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு மலை கிராமங்களில் தேவை யான அடிப்படை வசதி கள் அனைத்தும் நிறை வேற்றி வேண்டும்.  தொடர்ச்சியாக போராடி வரும் இந்த மலை கிராம மக்களுக்கு பட்டாவழங்கி இவர்களுக்கு வாழ்வு ரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியு றுத்தி வரும் 4 நாட்களுக்கு இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள், பொதுமக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசி யல் பிரமுகர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

கலெக்டர் அலுவலக வாயில்களுக்கு பூட்டு :
கடமலைக்குண்டுவில் சனிக்கிழமை  முதல் மலைக்கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். இந்நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவ தைத் தவிர்க்கும் வகையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டுள் ளது. பேரிகார்டுகளை வைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் வரும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் முறையாக சோதனை செய்யப்பட்ட பின்பே உள்ள அனுமதிக்கப்பட உள்ளனர்

டாஸ்மாக் மூடல் :  அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு போராட்டம் நடை பெறும் நாட்களில் கடமலை குண்டு, வருசநாடு, மயிலா டும்பாறை, தங்கம்மாள்புரம், மூலக்கடை, குமணன்தொழு ஆகிய கிராமங்களில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளும் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் தங்களது செல்போன் டார்ச் லைட்டுகளை பெரிய விட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், இன்று மதுரை வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தங்களைக் காண கடவுளைக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் வழக்கு விசாரணையை பொறுத்தே, போராட்டக்காரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தெரியவரும். நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால் போராட்டக் களத்திற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என கூறப்படுகிறது.

கடமலைக்குண்டு பஸ் நிலைய போராட்டத் தளத்திலிருந்து செய்திகளுக்காக  - இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

ஆண்டிபட்டி தாலுகா நிருபர் மீனாட்சி சுந்தர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment