| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?

by satheesh on | 2026-09-24 01:44 PM

Share:


பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?

பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சமராஜ்யத்தின் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?

ஒரு காலத்தில் இந்தியாவின் கிரானைட் தொழிலையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தொழிலதிபர்… ஆயிரக்கணக்கான ஊழியர்கள்… பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்யம்… தொழில்துறையில் மிகப்பெரிய பெயர்… ஆனால் இன்று அதே மனிதர் ஒரு சிறுமி தொடர்பான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அது மட்டுமல்ல… இந்த வழக்கு வெளியில் வந்த விதமும், அதன்பிறகு நடந்த சம்பவங்களும், இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் வேறு யாருமல்ல… ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி. சட்டம் படித்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வீரமணி, பின்னர் முற்றிலும் வேறு பாதைக்குச் செல்லும் விதமாக 1971-ம் ஆண்டு கிரானைட் தொழிலில் காலடி வைத்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் கிரானைட் தொழில் இன்றைய அளவுக்கு பெரிய தொழிலாகவே இல்லை. ஆனால் வீரமணி அந்தத் துறையில் ஒரு பெரிய வாய்ப்பைப் பார்த்தார். அதன் விளைவாக உருவானதுதான் ‘ஜெம் கிரானைட்ஸ்’. காலம் செல்லச் செல்ல அந்த நிறுவனம் வளர்ந்தது. குறிப்பாக 1990-களில் கிரானைட் ஏற்றுமதியில் ஜெம் கிரானைட்ஸ் முக்கிய நிறுவனமாக உருவெடுத்தது. தொழில் வளர்ந்தது… பெயர் வளர்ந்தது… அதோடு வீரமணியின் செல்வாக்கும் அதிகரித்தது.கிரானைட் மற்றும் கல் தொழில் தொடர்பான அமைப்புகளில் முக்கிய பொறுப்புகள் வகித்தார். வர்த்தக அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளில் இருந்தார்.ஒரு கட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்த தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தார். இப்படி தொழில்துறையில் பல ஆண்டுகளாக உயரத்தில் இருந்த ஒருவருடைய வாழ்க்கையில்…ஒரு பென்டிரைவ் வந்து இவ்வளவு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த பென்டிரைவில்தான் இந்த வழக்கின் ஆரம்பக்கதை இருந்ததாக போலீஸ் கூறுகிறது. 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம்… சென்னையைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையை அணுகுகிறார். அவரிடம் ஒரு பென்டிரைவ் இருந்ததாகவும், அதில் ஒரு வயது குறைந்த பெண்கள்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்தனர். அதன்பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நகர நகர… அந்த வீடியோவில் இருந்த நபர் யார் என்ற கேள்விக்கு போலீசார் ஒரு அதிர்ச்சிகரமான முடிவுக்கு வந்ததாக கூறினர். அவர் தொழிலதிபர் வீரமணி என்று போலீஸ் விசாரணையில் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியானது.அதுமட்டுமல்ல… சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வீரமணி வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டைப் பற்றியும் விசாரணை திரும்பியது. அந்த வீட்டை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் நிர்வகித்து வந்ததாக போலீஸ் தெரிவித்தது. அந்த வீட்டில் சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் நடந்ததாக போலீஸ் குற்றம்சாட்டியது. வீடு மட்டுமல்ல…அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.இதன் அடிப்படையில்… வீரமணி மட்டுமல்லாமல் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் கைது செய்யப்பட்டனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment