by satheesh on | 2026-03-18 03:33 PM
திருநெல்வேலியில் எரிந்த நிலையில் கார் ! ஒரே குடும்பத்தில் நால்வர் பலி !!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உருமன்குளம் பெட்டைகுளம் பகுதியில் கார் தீப்பற்றியதில் சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் முகமது ரஃபீக் (45), சையது நஸ்ரின் பாத்திமா (36), 15 வயது மகள், 12 வயது மகன்.
கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பம் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விற்று காரிலேயே வசித்து வந்ததாக தகவல். சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உடைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களை அத்தங்கரை தர்ஹாவில் தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கொலை சாத்தியம் இல்லை என தகவல். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் எடுத்த புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. என்னதான் கடன் சுமை இருந்தாலும், அதற்கு தற்கொலை தீர்வல்ல. விவரம் தெரியாத ? புரியாத ? இரண்டு பிஞ்சு குழந்தைகள் பலியாகிது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!