by satheesh on | 2026-03-12 02:07 PM
10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர் !
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் ஹால் டிக்கெட் வழங்கி சார் ஆட்சியர் ஹீமான்சு மங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் "மீண்டும் மஞ்சப்பை" குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹீமான்சு மங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர், வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்குத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசிய அவர், மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பள்ளியின் முன்னாள் மாணவி சுப்பு சுந்தர வடிவு என்பவரின் தாயார் கிருஷ்ணம்மாளின் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளியில் பயிலும் சுமார் 2,500 மாணவிகளுக்கு இலவசமாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, உதவித் தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமைப்படை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இசை ஆசிரியை அமல புஷ்பம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இறுதியாக, ஆசிரியை மங்களேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!