by Vignesh Perumal on | 2025-09-26 02:47 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டா மாற்றம் செய்து கொடுக்க ₹4,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ஒருவரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன் (50). இவர், புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு, புத்திராம்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அங்கு வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றும் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த கோமதி (38), பட்டா மாற்றத்தை விரைந்து முடிக்க பொன்னையனிடம் ₹4,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்னையன், இது குறித்துக் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான அதிகாரிகள், ரசாயனம் தடவிய ₹4,000 பணத்தைப் பொன்னையனிடம் கொடுத்து அனுப்பினர்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியிலிருந்த பெண் வி.ஏ.ஓ. கோமதியிடம் பொன்னையன் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் அருண்ராஜ் தலைமையிலான போலீசார், லஞ்சப் பணம் மற்றும் கோமதியின் கைரேகைப் பதிவுகளுடன் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. கோமதியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!