by Vignesh Perumal on | 2025-09-25 03:50 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான காவல்துறையினர், உதவி காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்லாவுடன் அப்பகுதியில் இன்று (செப்டம்பர் 25, 2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வத்தலகுண்டு நவீன் பேக்கரி அருகே, ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சிவானந்தபெருமாள் (29) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையினர், சிவானந்தபெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!