by Vignesh Perumal on | 2025-09-18 05:11 PM
தேனி மாவட்டத்தில் சமூக நீதி தினத்தை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹாப்ரியா தலைமையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 'சமூக நீதி நாள்' உறுதிமொழியை ஏற்றனர்.
செப்டம்பர் 17, 2025 அன்று, தேனி மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஜெரால்ட் அலெக்சாண்டர், மற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
அவர்கள், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளலாரின் அன்பு நெறியையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் பண்பு நெறியையும் தங்கள் வாழ்வின் அடிப்படை விதிகளாகக் கடைப்பிடிப்பதாக உறுதி பூண்டனர்.
தனிப்பட்ட வாழ்விலும், பணியிலும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுடன் செயல்படுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சமூகம் முழுவதும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமதர்மம் நிலவ பாடுபடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.
மனிதநேயம் மற்றும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதாகவும், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதாகவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, காவல் துறையின் சமூக பொறுப்புணர்வையும், சமூக நீதிக் கொள்கைகளை மேம்படுத்தும் அவர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!