by Vignesh Perumal on | 2025-05-02 04:20 PM
வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போஸ்டர், பேனர் போன்ற விளம்பரங்களை வெளியிட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தாலும் வழக்கறிஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வழக்கறிஞர்கள் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் தொழில் கண்ணியமான தொழில் என்றும், விளம்பரம் செய்வது அந்த கண்ணியத்தை குறைத்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் விரைவில் விரிவான அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?