by Vignesh Perumal on | 2025-04-25 10:24 PM
தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது குறித்தும், அவர்கள் வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் புதியவர்களை சேர்ப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 30-ஆம் தேதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், அமைச்சரவையில் மாற்றம் குறித்த தகவல்கள் உண்மை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!