by Vignesh Perumal on | 2025-04-23 03:11 PM
துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவது தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக வெளியான தகவல்களுக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதில் எந்தவிதமான அதிகாரப் போட்டியும் இல்லை என்றும், இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகையின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், இந்த விளக்கம் மேலும் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!