by Vignesh Perumal on | 2025-04-23 10:14 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி சிவசக்தி (வயது 23). இவருக்கு கடந்த 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில், கடந்த 20-ம் தேதி குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது.
குழந்தை இறந்தவுடன், பெற்றோர் குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வினோத் அளித்த புகாரின் பேரில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23) தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவக் குழுவினரின் தலைமையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!