by Vignesh Perumal on | 2025-04-22 04:53 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த தங்களது 25 ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளை கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் என்னவென்றால், சில தினங்களுக்கு முன்பு பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விவசாயிகளின் ஆடுகள் மீது மோதியதில் 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி வந்து பழனி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இறக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!