by Vignesh Perumal on | 2025-04-22 10:28 AM
கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும். அதேபோல், எம் சாண்ட் விலை ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் விலை ரூ.7 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறையின் அனுமதிச் சீட்டு விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகளின் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!