by Vignesh Perumal on | 2025-04-21 04:12 PM
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக ₹2,000 லஞ்சம் வாங்கிய இளநிலை மின்பொறியாளர் அம்பேத்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. சத்தியராஜ் அவர்களுக்கு மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சேத்தியாதோப்பில் காத்திருந்தனர். அப்போது, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவரிடம் இருந்து இளநிலை மின்பொறியாளர் அம்பேத்கர் லஞ்சமாக ₹2,000 பெற்றபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்பேத்கர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்றும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!