by Vignesh Perumal on | 2025-04-21 01:00 PM
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 21, 2025) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு புதிய பொலிரோ வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த புதிய வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், புதிய வாகனங்கள் காவல் ஆய்வாளர்களின் பணிகளை மேலும் திறம்படவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவும் என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும் இந்த வாகனங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வாகனங்கள் வழங்கப்பட்ட ஆய்வாளர்கள், தங்களது பணிகளை இன்னும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதாகவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். இந்த விழாவில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!