by Vignesh Perumal on | 2025-04-21 10:27 AM
ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 20, 2025) பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கனமழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ரம்பான் மாவட்ட நிர்வாகம், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளிகள் இன்று (ஏப்ரல் 21, 2025) மூடப்பட்டுள்ளன.
இந்த துயர சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் நில மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!