by Vignesh Perumal on | 2025-04-16 09:29 AM
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் முள்ளிபாடி கிராமத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலத்தில் அக்கிராமத்தினர் விவசாயம் செய்வதோடு வீடுகள் கட்டி உள்ளனர். இவர்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸில் அறங்காவலர் குழு கூறியிருப்பதாவது: "45 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்நிலத்திற்கு வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் கோயில் வந்து நிலத்தை ஒப்படைப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் காக்க வரும் காலத்தில் நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். கோயில் அறங்காவலர் குழுவினர் கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!