by Vignesh Perumal on | 2025-04-11 09:29 AM
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ஆலாங்கொம்பு எம்ஜிஆர் சிலை அருகே ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் நான்கு இளைஞர்கள் பயணித்தனர். இவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்த மூவரும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வருகிறது.
ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஆறு பேர் பயணித்தனர். ஓட்டுநர் மற்றும் பயணித்த ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமுகை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!