by Vignesh Perumal on | 2025-04-03 12:13 PM
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் புதிய கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் மீது தவறான கண்ணோட்டம் இருப்பதாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அந்த எட்டு நபர்கள் மீது புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகிய எட்டு பேர் போலியான ஆதார் அட்டை பெற்று, எந்த ஒரு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது அம்பலமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் அந்த எட்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!