by satheesh on | 2026-07-04 06:10 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்திரவு.., 3 வருடங்கள், 3 வருடங்களுக்கு மிகாமல் "ஒரே பணி,அதே இடம்" என பணியாற்றி வந்த தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்..!
தேனி மாவட்ட வருவாய் அலகில் நிருவாக காரணங்களால் கீழ்காணும் வட்டாட்சியர்கள் பணியிடம் மாறுதல்களும் நியமனங்களும் வழங்கி மாவட்ட ஆட்சியர் அவர்களால் அதிரடி உத்தரவுகளுடன் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மதுரை தனி வட்டாட்சியர் (முத்திரை கட்டணம்) கே.ரத்தினம், தேனி வட்டாட்சியராகவும், தேனி வட்டாட்சியர் (தேசிய நெடுஞ்சாலை, நில எடுப்பு) கே.செந்தில்குமார் ஆண்டிபட்டி வட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் (தேர்தல்) எம்.சுருளி போடிநாயக்கனூர் வட்டாட்சியராகவும், தேனி, தனி வட்டாட்சியர் (சமூக நல பாதுகாப்பு திட்டம்) எ.புவனேஸ்வரி பெரியகுளம் வட்டாட்சியராகவும்., தேனி வட்டாட்சியர் அ.சதீஷ்குமார் தேனி (நில எடுப்பு,தேசிய நெடுஞ்சாலை) தனி வட்டாட்சியராகவும்., பெரியகுளம் வட்டாட்சியர் கே. மருதுபாண்டி தேனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (தேர்தல்) வட்டாட்சியராகவும். ஆண்டிபட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன் உத்தமபாளையம் (சமூக நல பாதுகாப்பு திட்டம்) தனி வட்டாட்சியராகவும். போடிநாயக்கனூர் வட்டாட்சியர் ட்டி. சந்திரசேகரன் மதுரை (முத்திரை கட்டணம்) தனி வட்டாட்சியராகவும்., உத்தமபாளையம் (சமூக நல பாதுகாப்பு திட்டம்) தனி வட்டாட்சியர் ப்பி.உதயராணி, தேனி (சமூக நல பாதுகாப்பு திட்டம்) வட்டாட்சியர்களாகவும் மேற்கண்ட துறைசார் அதிகாரிகளை வட்டாட்சியர்கள் நிலையில் மாற்றமும் அதனைத் தொடர்ந்த நியமனமும் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இவ்வாணை உடனுக்குடன் அமலுக்கு வருகிறது. இந்தப் பணியிடம் மாறுதல் தொடர்பாக எவ்வித மறுப்போ, மேல்முறையீடோ, விடுப்பு விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது . மேற்காணும் அலுவலர்கள் மாற்றுப்பணியிடம் கோரி மனு செய்தாலோ, மாறுதல் செய்யப்பட்ட பணியிடத்தில் உடனுக்குடன் சேர்ந்து பணியாற்றத் தவறினாலோ தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.என தேனி ஆட்சியர் உத்தரவு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"