by admin on | 2026-07-04 06:50 PM
போதைப்பொருள் கண்டறிய மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி முடித்த "ராணா" மோப்பநாய்
தேனி மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட "லாப்ரடர்" இனத்தைச் சேர்ந்த "ராணா" என்ற மோப்பநாய், போதைப்பொருள் கண்டறிதல் தொடர்பான 6 மாத கால சிறப்பு பயிற்சியை முடித்து மாவட்டத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன்கெளதம், இ.கா.ப., அவர்கள் "ராணா" மோப்பநாயை பார்வையிட்டு அதன் செயல்திறன் மற்றும் பயிற்சி தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தார்.
மேலும் இந்த மோப்பநாய் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதிலும், மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை துல்லியமாக கண்டுபிடிப்பதிலும் காவல்துறையினரின் புலனாய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"