| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!

by satheesh on | 2026-07-17 06:58 PM

Share:


விசாரணை கைதி மரணம் !  உடலை வாங்க மறுப்பு !!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன், குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.  இந்த வழக்கில் 3 சிறை வார்டன்கள் மற்றும் 8 கைதிகள் என 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு,  3 வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதையடுத்து, சபரி வர்மன் குடும்பத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரி வர்மன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். Bஅரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம், தற்காலிக அரசு வேலை, குழந்தையின் கல்வி உதவி, வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு திட்டத்தில் ரூ.3 லட்சம் வழங்க முன்வந்தனர்.  ஆனால், குடும்பத்தினர் இந்த நிவாரணங்களை ஏற்க மறுத்ததால் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.  பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குடும்பத்தின் வழக்கறிஞர்கள், பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, வீடியோவை தங்கள் மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆய்வு செய்ய ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தனர்.  அறிக்கையில் தவறு இல்லை என்பது உறுதியானால் உடலை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அரசு நிவாரணம் வழங்க முன்வந்ததற்கு முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.  உடலை பெற்றுக் கொள்ள அவசரப்படுத்தாமல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment