by satheesh on | 2026-07-03 08:49 PM
வருவாயை இழக்கும் பெரியகுளம் நகராட்சி ! வருமானம் பார்க்கும் வருவாய் பிரிவு !!
தேனி : பெரியகுளம் 100 ஆண்டுகள்கடந்த பழமை வாய்ந்த நகராட்சியாகும். இதில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் கட்டப்படும் கட்டிடங்கள் பலவும் நகராட்சியின் அனுமதி பெறுவதில்லை. அப்படியே ஒரு சில கட்டிடங்கள் அனுமதி பெற்றாலும் வரைபடத்தின் படியோ, விதிகளின்படியோ கட்டப்படுவதில்லை. மாறாக விதிகளை மீறி கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. இதனை கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரோ, அதிகாரியோ, நகராட்சி நிர்வாகமும் வழக்கமான " *கவனிப்பு* " காரணமாக கண்டு கொள்வதில்லை. கீழ் தரைத்தளம் (அண்டர் கிரவுண்ட்) நகராட்சியில் அனுமதி இல்லை என கூறப்படும் நிலையில் பல இடங்களிலும் கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்றதை விட கூடுதல் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும், பிளானில் காட்டியபடி கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை என கூறப்படுகிறது. மேலும், கட்டப்படும் கட்டிடங்களில் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், முறையான அளவீடு செய்யாமலும், மதிப்பை குறைத்து வரி நிர்ணயம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தெருக்களையும், சாலைகளையும் மற்றும் நகராட்சி இடங்களையும் ஆக்ரமிப்பு செய்பவர்கள் அலுவலர்களை "கவனிப்பதால் " கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. வரி விதிப்பதிலும் வரி வசூல் செய்வதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், முழுமையான வரி வசூலில் செய்யப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நகராட்சிக்கும் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், புதிய கட்டிடங்கள் மற்றும்மராமரத்து பணிகளை மேற்கொள்ளும் கட்டிடங்களை எந்தவித ஆய்வும் மேற்கொள்ளப்படுவதில்லை. கண் துடைப்பிற்காக ஆய்வுகள் மேற்கொள்ளும் நிலையில், சாலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சந்துகள், தெருக்கள், பாதைகளை அடைத்து இருக்கும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்வதில்லை. இதனால் போக்குவரத்துக்கும், ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனம் போன்ற அவசரகால வாகனங்கள் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. பல கட்டிடங்களும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மாறாகவே கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் சிறிய அளவிலான குப்பை வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக துறை உரிய ஆய்வினை மேற்கொண்டு வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"