by Vignesh Perumal on | 2025-04-03 10:54 AM
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.68,480 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் தற்போது விலை ரூ.8,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பன்னாட்டு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு தங்கம் ஏற்ற வகையில் இருப்பதனால் அதிக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை அவ்வப்போது அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது மேலும் தற்போதைய சூழலில் ஆபரணங்களின் பயன்பாட்டில் தங்கம் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் 8,425 ரூபாய்க்கும், ஒரு சவரன், 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்று மாலை நிலவரப்படி, ஒரு கிராம் 8,450 ரூபாய்க்கும், ஒரு சவரன், 67,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் 01 தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 8,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு, 480 ரூபாய் உயர்ந்து, வழக்கத்திற்கு மாறாக, ஒரு சவரன் 68,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 02 நிலவரப்படி தங்கம் விலையில் எவ்வித மாற்றமில்லை. ஆனால், இன்று நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு விலையில் உச்சம் கண்டு தற்போது 68 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!