by Vignesh Perumal on | 2025-04-01 05:07 PM
நூறுநாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி பாக்கி 4000 கோடியை ஒன்றிய அரசே உடனே வழங்கிடு என பல்வேறு கோரிக்கையை முன் வைத்து, தமிழ் மாநில விவசாய தொழிளாளர் சங்கம் சார்பில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பாக வி. தொ. ச மாவட்ட செயலாளர் தோழர் N. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தேவாரம் வ. உ. சி மைதானத்தில் இருந்து பேரணியாக வந்து தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் வீ.பாண்டி கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஈ. முத்துலட்சுமி, வி. ச ஒன்றிய செயலாளர் தோழர் ரா. ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் தோழர். ரா. சதீஸ் மற்றும் பெருமளவில் அனைத்து கிளைகளில் இருந்தும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!