by Vignesh Perumal on | 2026-07-20 01:13 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமலை, பழையூர் அண்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, சிறுமலை பழையூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது பகுதியில் நிலவி வரும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில் பொதுமக்கள் தங்களது அன்றாடப் பாதிப்புகள் குறித்துப் பின்வரும் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
சிறுமலை பழையூர் அண்ணா நகர் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமான முறையில், அனுமதியின்றி மதுபானங்கள் (மது பாட்டில்கள்) பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சட்டவிரோத மது விற்பனையால், அப்பகுதியில் எப்போதும் குடிகாரர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குடித்துவிட்டு பொது இடங்களில் அரைகுறை ஆடையுடனும், சுயநினைவின்றியும் கிடக்கும் நபர்களால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
போதை ஆசாமிகள் தங்களுக்குள் தகராறில் ஈடுபடுவதோடு மட்டுமன்றி, அக்கம் பக்கத்தினரிடமும், சாலையில் செல்வோர் மீதும் தேவையற்ற சண்டைகளில் ஈடுபடுகின்றனர். அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் தகாத வார்த்தைகளால் அப்பகுதி மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்களின் அத்துமீறல்களால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அச்சமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
"எங்கள் கிராமத்தின் அமைதியைக் கெடுக்கும் இந்தச் சட்டவிரோத மது விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதிப் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அதிகாரிகள், இது குறித்து உடனடியாகத் தகுந்த விசாரணை நடத்தி, சிறுமலைப் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!
24 மணி நேரமும் சட்டவிரோத விற்பனை...! கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்....!
எம்எல்ஏ கைது....! "சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா.?" - கடும் கண்டனம்....!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி....! நிர்வாகம் உடனடி விளக்கம்....!